Nov 30, 2011

16 பேறுகள்

16 பேறுகள் - பதினாறு செல்வங்கள்:


தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

16 பேறுகள்

Note : The above picture has been taken from Tiruvatikai Veerateswarar Temple near  Panruti .

பதினாறு செல்வங்கள்: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப்
பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால்
நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)


பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.


சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
    தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
    தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
    அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
    ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
    சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
    சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
    வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
    வாமி! அபிராமி உமையே!                     -அபிராமி பட்டர்.

    அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியைத் தவிர, அபிராமி அம்பிகை மீது இரு பதிகங்கள் பாடியுள்ளார். இரண்டாவது பதிகத்தின் நிறைவுப் பாடலான மேற்கண்ட பாடலில் மக்கள்   விரும்பும் பதினாறு வகைப் பேறுகளைப் பட்டியலிடுகிறார். 





No comments:

Post a Comment